NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடற்றொழிலாளி  சடலமாக மீட்பு..!

கடற்றொழிலுக்குச் சென்றவர் வள்ளத்தில் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அராலி மத்தியைச் சேர்ந்த சி.நாகராசா என்ற ௫௩ வயதுடைய நான்கு பிள்ளைகளின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு தொழிலுக்குச் சென்ற இவர் இன்று காலை வீடு திரும்பாததைத் தொடர்ந்து சக தொழிலாளர்களும் உறவினர்களும் தேடுதலில் ஈடுபட்டனர்.

இதன்போது பொன்னாலைக் கடற்கரையோரமாக,
இராவணேஸ்வரத்திற்கு சமீபமாக வள்ளம் கரையொதுங்கிருந்ததைக் கண்டனர். குறித்த கடற்றொழிலாளி வள்ளத்தினுள் சடலமாகக் காணப்பட்டார்.

இது தொடர்பாக கிராம சேவையாளர் மற்றும் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த அவர்களும் திடீர் மரண விசாரணை அதிகாரியும் விசாரணையை மேற்கொண்டதை அடுத்து உடற்கூற்றுப் பரிசோதனைக்காக சடலம் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

Share:

Related Articles