NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கடவுச்சீட்டுகளை இணையவழி முறையில் வழங்கும் வேலைத்திட்டம் இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று (14) ஹோமா பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.

கடவுச்சீட்டை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பத்தை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த வேலைத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் புதிய வேலைத்திட்டத்தின் கீழ், விண்ணப்பித்த 3 நாட்களுக்குள் கடவுச்சீட்டை பொதிகள் சேவை மூலம் வீட்டுக்கு பெற்றுக்கொடுக்க முடியும். செயலகங்களில் செயற்படும் ஆட்பதிவு திணைக்களத்தில் கைவிரல் அடையாளங்களை விண்ணப்பதாரிகள் வழங்க முடியும்.

Share:

Related Articles