NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடவுச்சீட்டுக்கான விண்ணப்பங்களை சமர்பிப்போருக்கான முக்கிய அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

இலங்கையில் இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்களத்திற்கு 50,330 இணையவழி விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

நேற்று (10) காலை 8.30 மணிவரை இந்த விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான சேவையின் கீழ் 41,588 விண்ணப்பங்கள் கிடைத்துள்ள நிலையில் அதில் 26,972 விண்ணப்பங்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களாக சகல ஆவணங்களுடன் ஏற்றுக்கொள்ளப்பட்டு இதுவரை 6,405 வெளிநாட்டு கடவுச்சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளன.

குறைபாடுள்ள ஆவணங்களுடன் அனுப்பப்பட்ட 14,676 விண்ணப்பங்கள் தொடர்பில் விண்ணப்பதாரர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், குறைபாடுள்ள ஆவணங்களை மீள அனுப்புமாறும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திற்கு இணையவழி முறை மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் போது சரியாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறு குடிவரவு கட்டுப்பாட்டாளர் நாயகம் விண்ணப்பதாரர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles