NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடும் வெப்பம் காரணமாக பக்கவாதம் – இதயநோய் ஏற்பட அதிக வாய்ப்பு!

நாட்டில் இந்நாட்களில் அதிகம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள அதிக வெப்பநிலை காரணமாக, பக்கவாதம் மற்றும் இதயநோய்கள் ஏற்படும் அபாயம் அதிகம் காணப்படுவதாக, அரசாங்க ஆயுர்வேத வைத்தியர் சங்கத்தின் சமூக சுகாதார செயலாளர் வைத்தியர் சேனக கமகே தெரிவித்துள்ளார்.

இன்று (19) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அத்துடன், பொலிஸ் உத்தியோகத்தர்களைப் போன்று வெட்ட வெளியில் நின்று பணிபுரிபவர்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இந்நாட்களில் பல்வேறு பகுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்று வருவதால், காலை 11.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை வெளிப்புற விளையாட்டுகளை தவிர்க்குமாறு ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும், தண்ணீர், தர்பூசணி, தோடம்பழ பானம், தேங்காய் தண்ணீர் போன்ற உள்ளுர் பானங்களை முடிந்தவரை பயன்படுத்துவது நல்லது எனவும் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், வயிற்றுப்போக்கு காரணமாக குழந்தைகளுக்கு நீர்ச்சத்து குறையாமல் இருக்க கொத்தமல்லி, வடித்த சாதம் போன்றவற்றை வழங்குமாறு வயோதிபர்களிடம் வைத்தியர் சேனக கோரிக்கை விடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles