NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கடைக்குள் புகுந்து விபத்துக்குள்ளான பஸ் – ஐவர் காயம்!

கல்முனையிலிருந்து கொழும்பு  நோக்கி பயணித்த அரச பஸ் செங்கலடி சந்தியில் இன்று அதிகாலை விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் பஸ் சாரதி மற்றும் நடத்துனர் உட்பட ஐவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த அரச பஸ் வேகக்கட்டுப்பாட்டை இழந்து செங்கலடி சந்தியிலுள்ள ரான்ஸ்போமர் தூணை உடைத்து கடையொன்றினுள் புகுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார்  விபத்து தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles