பாராளுமன்றத்தின் எதிர்கால விவகாரங்கள் குறித்து தீர்மானிக்க பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று (20) கூடியுள்ளது.
பாராளுமன்ற விவகாரங்களுக்கான குழு இன்று காலை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் கூடியுள்ளது.
இதற்காக பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் அக்கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
இதேவேளை, புத்தாண்டின் பின்னர் பாராளுமன்றம் முதன்முறையாக ஏப்ரல் 25ஆம் திகதி மீண்டும் கூடவுள்ளது.
புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை எதிர்வரும் பாராளுமன்ற அமர்வில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக இன்று நடைபெறும் பாராளுமன்ற விவகாரக் குழு கூட்டத்தில் கட்சித் தலைவர்கள் இறுதி முடிவு எடுக்கவுள்ளனர்.