NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டில், கண்ணாடி, சோபாவை சாப்பிடும் குழந்தை!

இங்கிலாந்தில் உள்ள வேல்ஸ் பிளாக்வுட் நகரை சேர்ந்த பெண்ணுக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்த குழந்தை வீட்டில் விளையாடும் போது தரையில் கிடந்த பொருட்களை எல்லாம் வாயில் போடுவதும்இ அதை சாப்பிடுவதுமாக இருந்துள்ளது. குழந்தைகளுக்கு இதுபோன்ற பழக்கம் வழக்கமானது என்பதால் நாளடைவில் இது சரியாகி விடும் என அவரது தாயார் கருதினார்.

ஆனால் வழக்கத்திற்கு மாறாக சோபாவில் உள்ள பஞ்சு, போட்டோ பிரேம், கண்ணாடி துண்டுகள்இ கட்டிலில் உள்ள மரக்கட்டைகள் என அனைத்து பொருட்களையும் குழந்தை சாப்பிட தொடங்கியதால் ஸ்டேஷி அதிர்ச்சியடைந்தார். இதனால் குழந்தை தூங்கும் நேரத்தை தவிர சில நேரங்களில் அந்த குழந்தையையே கண்காணிக்கும் நிலை ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து குழந்தையை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்த போது அந்த குழந்தைக்கு எதைப்பார்த்தாலும் சாப்பிட வேண்டும் என ஆர்ட்டிசம் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து பேசிய ஸ்டேஷிஇ குழந்தையின் உணவு பழக்கத்தால் குழந்தையை கண்காணிப்பதே முழு நேர வேலையாக மாறி விட்டது. குழந்தை எந்த நேரத்தில் எதை சாப்பிடுகிறது என்ற பயத்தில் இருக்க வேண்டியது உள்ளது. நள்ளிரவில் எழுந்து போர்வைஇ மெத்தையையும் சாப்பிடுகிறது. இதில் இருந்து குழந்தையை மீட்க போராடி வருகிறேன். இதற்கு மருத்துவர்கள் உதவ வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles