NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கட்டுநாயக்க – அபுதாபி விமான நிலையங்களுக்கு இடையில் குறைந்த கட்டணத்தில் விமான சேவை!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும், அபுதாபி விமான நிலையத்திற்கும் இடையில் திட்டமிடப்பட்ட குறைந்த கட்டண விமான சேவையை ஆரம்பிப்பதற்கான செயற்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், ‘யுசை யுளயை யுடிர னூயடிi’ விமான சேவைக்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை நேற்று (03) வெளிநாட்டு விமான செயற்பாடுகள் சான்றிதழை வழங்கியது.

விமான நிறுவனத்தின் நிறுவன அமைப்பு மற்றும் விமானப் பயணிகளின் பாதுகாப்பு, மற்றும் திறமையான விமானச் செயல்பாடுகளை உறுதி செய்வதற்காக நடத்தப்பட்ட நிகழ்ச்சிகள் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இந்த விமான நிறுவனம் செப்டம்பர் நடுப்பகுதியில் இருந்து தனது விமான நடவடிக்கைகளை தொடங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், விமான நிறுவனத்தின் பௌதீக வளங்கள், முறையான பயிற்சி, தகுதி மற்றும் அனுபவம் வாய்ந்த பணியாளர்கள், விமான செயற்பாடுகளுக்குத் தேவையான உபகரணங்கள் மற்றும் பிற சேவைகளை வழங்குவதற்கு இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை கவனம் செலுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles