NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கணவனின் அந்தரங்க உறுப்பை கூரிய ஆயுதத்தால் காயப்படுத்திய மனைவிக்குப் பிணை…!

தனது கணவரான இராணுவ சிப்பாயின் அந்தரங்க உறுப்பை கூரிய ஆயுதத்தால் காயப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் மனைவி விளக்கம்றியலில் வைப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் அனுராதபுரத்தில் இடம்பெற்றுள்ளது. அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இந்த செயலை செய்துள்ளார்.

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மனைவியை இரண்டு இலட்சம் ரூபா சரீர பிணையில் விடுவிக்குமாறு அனுராதபுரம் பிரதான நீதிவான் நாலக சஞ்சீவ ஜயசூரிய உத்தரவிட்டுள்ளார்.

பகலில் தனது கணவர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது பாக்குவெட்டி ஒன்றினால் கணவரின் ஆணுறுப்பை வெட்டி காயப்படுத்தியுள்ளார்.

காயமடைந்த கணவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, சந்தேக நபரை அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் மனநல பிரிவில் அனுமதித்து வைத்திய சோதனைகளை மேற்கொண்டு, எதிர்வரும் 17ஆம் திகதி வைத்தியர் சான்றிதழை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles