கதிர்காமம் விகாரையின் தங்க வட்டு காணாமல்போன சம்பவம் தொடர்பில் ருஹுணு கதிர்காமம் விகாரையின் இரண்டாவது கபுரால சமன் பிரியந்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவில் சாட்சியமளிக்க சரணடைந்துள்ளார்.
குற்றத்தடுப்புப் பிரிவில் சரணடைந்த அவரிடம் இரண்டு மணி நேரம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
கதிர்காமம் விகாரையில் தங்க வட்டு காணாமல் போனமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளப்பட்ட பின்னரே இரண்டாவது கபுரால சமன் பிரியந்த கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, தங்க வட்டு காணாமல் போனமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ள பிரதான கபுரால சோமிபால ரத்நாயக்கவின் வீட்டுக்கு சென்ற போது அவர் வீட்டில் இல்லை என்றும் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கதிர்காமம் பொலிஸார் மற்றும் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினர் இணைந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கதிர்காமம் மகா விவகாரையின் பிரதான கபுரால (கபுவா) மற்றும் விகாரையின் திறைசேரிக்கு பொறுப்பான கபுரால ஆகியோரை கைது செய்யுமாறு கடந்த 8ஆம் திகதி சட்டமா அதிபர் பணிப்புரை விடுத்திருந்தார்.
குழந்தையின் நேர்த்திக்கடனுக்கான பாதாள உலக தலைவர் அங்கொட லொக்காவின் மனைவி கதிர்காமம் விகாரைக்கு 38 பவுண்கள் எடை கொண்ட தங்க வட்டை வழங்கியிருந்தார். இந்த தங்க வட்டே காணாமல் போயுள்ளது.