NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கந்தானையில் பொலிஸ் வேடமிட்டு கொள்ளை!

கந்தானை பகுதியிலுள்ள கடையொன்றிற்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் போன்று வேடமிட்டு நபர் ஒருவரின் மோட்டார் சைக்கிள் மற்றும் கைத்தொலைபேசியை 4 பேர் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக கந்தானை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி 3,50,000 ரூபா என கந்தானை பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

வாகனங்களுக்கு பெயின்ட் அடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஜா-எல பகுதியை சேர்ந்த 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

Share:

Related Articles