(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கந்தானை – சர்ச் வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தினால் சுவாசக் கோளாறு ஏற்பட்டு சுமார் 50 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கந்தானை பிரதேசத்திலுள்ள இரசாயன உற்பத்தி நிலையத்திற்கு சொந்தமான களஞ்சியசாலையில் ஏற்பட்ட தீயினால் பரவிய நச்சுப்புகை காரணமாகவே குறித்த மாணவர்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை. எனினும் சம்பவம் தொடர்பில் கந்தானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக கூறியுள்ளனர்.