(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கந்தானை இரசாயன தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கந்தானை – சர்ச் வீதியில் உள்ள இரசாயன தொழிற்சாலை ஒன்றில் இன்று (08) காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்புப் படையினர் இடத்திற்கு விரைந்துள்ள நிலையில், தற்போது தீயை அணைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனினும் தீ மிகவும் வேகமாக பரவிவருவதாக தெரிவிக்கப்படுகிறது.