கனடாவில், 60 ஆண்டுகளுக்குப் பின்னர் முதன்முறையாக (வெறிநாய்க்கடி) ரேபிஸ் நோய் கண்டறியப்பட்டுள்ளது.
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் உள்ள ஒருவர் ரேபிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த நாட்டு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
வௌவால் ஒன்றிடமிருந்து அவருக்கு அந்த நோய் பரவியிருக்கலாமென சந்தேகிக்கப்படுகிறது.
இந்நிலையில் ரேபிஸ் நோய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்கள் சுகாதார நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.