(அமிர்தப்பிரியா சிலவிங்கம்)
கனடா ஓபன் டென்னிஸ் தொடர் மாண்ட்ரியல் நகரில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இத்தாலி வீரர் ஜென்னிக் சின்னர், அவுஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் மோதினார்.
இந்தப் போட்டியில் ஜென்னிக் சின்னர் 6-4, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியன் பட்டம் வென்றார்.
இதேபோல், பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதி ஆட்டத்தில் அமெரிக்காவின் ஜெசிக்கா பெகுலா, ரஷியாவின் சாம்சனோவாவுடன் மோதினார். இதில் பெகுலா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் வென்று சம்பியன் பட்டம் வென்றார்.து.