NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கனேமுல்ல சஞ்சீவவின் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபர் பற்றிய தகவல்கள் வெளியானது…!

புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5 ஆம் எண் நீதவான் நீதிமன்றத்திற்குள் கனேமுல்ல சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டது குறித்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், தற்போது சட்டத்தரணி வேடத்தில் வந்து கொலை செய்த நபர் பற்றிய தகவல்களைக் கண்டுபிடித்துள்ளனர்.

கனேமுல்ல சஞ்சீவவின் கொலையின் முக்கிய சந்தேக நபர் அடிப்படைப் பயிற்சியை முடித்துவிட்டு இராணுவத்திலிருந்து தப்பியோடியவர் என்று இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இராணுவப் பயிற்சியின் போது தப்பிச் சென்ற குறித்த சிப்பாய், பின்னர் பொது மன்னிப்புக் காலத்தின் கீழ் சட்டப்பூர்வமாக இராணுவத்திலிருந்து இராஜினாமா செய்துள்ளதாகவும் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அன்றிலிருந்து அவர் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் தெரியவருகிறது.

சந்தேக நபர் சுமார் 7 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என்றும், தெஹிவளை, வட்டரப்பலவில் நடந்த இரட்டைக் கொலையிலும் அவருக்கு தொடர்பு இருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அதன்படி, நீதிமன்றிற்குள் துப்பாக்கிச் சூடு நடத்தியவர், கடந்த மாதம் 7 ஆம் திகதி கல்கிஸ்ஸை, வட்டரப்பல பகுதியில் ,ரண்டு பேரை சுட்டுக் கொன்ற துப்பாக்கிதாரி என்று பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

Share:

Related Articles