(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் கப்பல்களின் எண்ணெய் கசிவு கண்காணிப்பு சேவைகளை வழங்குவது தொடர்பாக பிரான்ஸ் அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள அமைச்சரவையில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவினால் இந்த யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதுடன், இது ஒரு வருட காலத்திற்கு நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நாட்டின் கரையோரத்தில் நாளொன்றுக்கு 300 முதல் 350 கப்பல்கள் பயணிப்பதால் கடல் போக்குவரத்து அடர்த்தி மிக அதிகமாக இருப்பதாகவும் இதன்காரணமாக, கப்பல்களின் எண்ணெய் கசிவு கண்காணிப்பு சேவைகளை முன்னெடுப்படுது அவசியம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.