மத்திய மாகாண ரீதியில் நடத்தப்பட்ட 20 வயதிற்குக் கீழ்ப்பட்ட பெண்களுக்கான கரப்பந்தாட்ட விளையாட்டுப் போட்டியில் அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலயத்தின் மாணவிகள் சாதனைப் படைத்துள்ளனர்.
கடந்த ஜூலை மாதம் நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் அக்கரபத்தனை தமிழ் மகா வித்தியாலய மாணவிகள் இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இந்த மாதம் இடம்பெறவுள்ள அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்டாப் போட்டியில் பங்குபற்ற தகுதி பெற்றுள்ளனர்.
பாடசாலை வரலாற்றில் அகில இலங்கை ரீதியிலான கரப்பந்தாட்டாப் போட்டிக்கு தகுதிப் பெற்றுள்ளமை இதுவே முதன்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.