NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

2022ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை இன்று ஆரம்பமாகிறது.

எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள பரீட்சையில் 4 இலட்சத்து 72 ஆயிரத்து 553 மாணவர்கள் தோற்றவுள்ளனர். 3 இலட்சத்து 94 ஆயிரத்து 450 பேர் பாடசாலை பரீட்சார்த்திகள் ஆவர்.

நாடளாவிய ரீதியில் 3,568 பரீட்சை மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. விசேட தேவையுடைய மாணவர்களுக்காக இரத்மலானை, தங்காலை ஆகிய பகுதிகளில் இரு விசேட பரீட்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, சிறைக் கைதிகளுக்காக பரீட்சை மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுபவர்களுக்காக விசேட பரீட்சை மத்திய நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles