NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கல்வி அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு…!

2024 ஆம் ஆண்டிற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

2024 ஆம் ஆண்டு கல்வி நடவடிக்கைகளுக்காக அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடை துணிகளையும் சீனாவிடம் கோரியுள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles