நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் நெற்தொகை காணாமல்போன சம்பவம் தொடர்பில் இரு அதிகாரிகள் பணி இடைநீக்கப்பட்டுள்ளனர்.
நெல் சந்தைப்படுத்தல் சபையின் ஐந்து களஞ்சியசாலைகளில் காணப்பட்ட சுமார் 65 முதல் 70 மில்லியன் ரூபா பெறுமதியான நெல் தொகை காணாமல் போயுள்ளதாக கடந்தவாரம் விவசாய அமைச்சு தெரிவித்திருந்தது.
எவ்வாறாயினும், சம்பந்தப்பட்ட நெல் கையிருப்பு காணாமல் போனதில் நெல் சந்தைப்படுத்தல் சபையின் தலைமை அலுவலக அதிகாரிகள் மற்றும் சில பிராந்திய அலுவலகங்களின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபை ஊழியர்கள் விவசாய அமைச்சரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, குருநாகல் மாவட்டத்தில் உள்ள ஐந்து நெல் களஞ்சியசாலைகளில் இந்த திருட்டு சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், இது தொடர்பிலான முழுமையான அறிக்கையை மூன்று நாட்களுக்குள் வழங்குமாறு விவசாய அமைச்சர், நெல் சந்தைப்படுத்தல் தலைவருக்கு உத்தரவிட்டிருந்ததுடன், இது தொடர்பான அறிக்கை கிடைத்தவுடன் முழுமையான விசாரணைக்காக இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும் என விவசாய அமைச்சர் தெரிவித்திருந்தார்.