காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நேற்று பிற்பகல் மூழ்கி பாடசாலை மாணவரொருவர் உயிரிழந்துள்ளார்.
தனது உறவினர்களுடன் நீராட சென்றிருந்த வேளையில குறித்த சிறுவன் நீரில் மூழ்கியுள்ளார்.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த டயஸ் பெர்ணான்டோ கிளின்டன் எனும் 17 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.