NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசாவில் தொற்று நோய் பரவல் – ஐ.நா கவலை!

இஸ்ரேல் நாட்டின் மீது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் போராளிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. 

இந்நிலையில் போரால் பாதிக்கப்பட்டுள்ள காசாவில் தொற்று நோய் பரவி வருவதாக பலஸ்தீன விவகாரங்களுக்கான ஐ.நா நிறுவனம் கவலை தெரிவித்துள்ளது. 

இந்த நிறுவனத்தின் சார்பான பாதுகாப்பு இடங்களில் சுமார் 5 இலட்சத்து 30 ஆயிரத்திற்கும் அதிகமான பலஸ்தீனியர்கள் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், கூட்டம் அதிகம் இருப்பதால் மக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுவாச தொற்று நோய்கள், வயிற்றுப்போக்கு, அம்மை உள்ளிட்ட பல நோய்கள் பரவி வருவதாகவும், மக்கள் இடமின்றி வீதிகளில் உறங்கி வருவதாகவும், புதிதாக வருவோருக்கு ஐ.நா பாதுகாப்பு இடங்களில் இடமில்லை எனவும் கவலை வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles