NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காசா வைத்தியசாலை பாதுகாக்கப்பட வேண்டும் – ஜோ பைடன்

காசாவில் உள்ள மிகப்பெரிய வைத்தியசாலையான அல்-ஷிபா, இஸ்ரேல் இராணுவத்தால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.

அங்கு மறைந்து கொண்டு ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

எனினும், இஸ்ரேல் குற்றச்சாட்டை காசா மறுத்துள்ளது.

இதற்கிடையே வைத்தியசாலையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டு செயல் இழக்கும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இன்குபெட்டரில் சிகிச்சை பெற்று வரும் குழந்தைகள் உயிரிழந்து வருகின்றனர்.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், ‘வைத்தியசாலையை பொறுத்தவரை குறைவான ஊடுருவல் நடவடிக்கை இருக்கும் என்பது என்னுடைய நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்பு’ எனத் தெரிவித்துள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் தங்களது கவலையை இஸ்ரேலிடம் தெரிவிப்பீர்களா? என்ற கேள்விக்கு, மருத்துவமனை பாதுகாக்கப்பட வேண்டும்’ என்றார்.

Share:

Related Articles