1980 ஆம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பதிவுகளின் படி 75 சதவீதமான விசாரணைகள் முழுமை பெற்றுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாண பிராந்திய மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் எற்பாட்டில் 2 ஆயிரமாம் ஆண்டுக்கு முன்னர் காணாமல் ஆக்கப்பட்டோவர்களின் விசாரணைகளை மேற்கொள்ளும் நடவடிக்கை நேற்று கல்வியங்காட்டில் அமைந்துள்ள குறித்த அலுவலகத்தில், யாழ்ப்பாண பிராந்திய மாவட்ட காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலத்தின் அதிகாரி தலைமையில் நடைபெற்றது.
இதில் கள விஜயத்தினை மேற்கொண்ட போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் மகேஷ் கட்டுலந்த இதனைத் தெரிவித்துள்ளார்.
மேலும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்கு குற்றப்புலனாய்வுத் திணைக்கள மற்றும் சட்டமா அதிபரின் அறிக்கைகளையும் பெற்று வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான கோவையினையும் பெற்றுவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேநேரம், இவற்றில் 14 ஆயிரத்து 988 காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கோவைகளுக்கான விசாரணை மேற்கொண்டுள்தா அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.