காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கும் பணியை பல்வேறு அரச நிறுவனங்கள் தனித்தனியாக முன்னெடுப்பதன் ஊடாக பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாகவும், தற்போது ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய, அது தொடர்பில் அனைத்து நிறுவனங்களும் ஒன்றிணைந்து செயற்படக் கூடிய வகையில் காணி தொடர்பிலான புதிய கொள்கையொன்றை வகுக்கத் திட்டமிட்டுள்ளதாகவும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
அதன் பின்னர் முழு உரிமையுள்ள காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கப்படும் என அமைச்சர் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.