NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலர் தினத்தை முன்னிட்டு பொலிஸாரின் விசேட அறிவிப்பு!

உலகளாவிய ரீதியில் நாளை (14) காதலர் தினத்தை முன்னிட்டு இலங்கை பொலிஸார் விழிப்புணர்வு அறிவிப்பு ஒன்று வெளியிட்டுள்ளனர்.


இலங்கை பொலிஸாரின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் ‘காதலர் தினத்திற்கு முன்’ என்று ஒரு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.


குறித்த அறிவிப்பில், “நீங்கள் ஒரு பெண்ணாக இருந்தால், காதலர் தினத்தன்று, அதனை கொண்டாட பாதுகாப்பற்ற இடங்களுக்குச் செல்வதற்கு முன், உங்கள் பெற்றோர் உங்களுக்கு கொடுத்த விலைமதிப்பற்ற வாழ்க்கையைப் பற்றி இருமுறை யோசியுங்கள் ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், இதுபோன்ற சூழ்நிலையில் பெண்கள் ஏதேனும் சிக்கல்களை சந்தித்தால், 109 அவசர தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளுமாறும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles