பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் காதல் உறவின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த மாணவர்கள் மீது ஹெல்மெட் மற்றும் கைகளால் உதைத்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலுக்கு உள்ளான பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று பாடசாலை முடிந்து பின்வத்த பிரிவென வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் வந்து தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
தலை, கண் மற்றும் உடலின் பல பாகங்களில் மாணவர்களின் மீது தாக்கப்பட்டதையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.