NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலமான சிரேஷ்ட தலைர் மாவை சேனாதிராஜாவின் இறுதி சடங்குகள் தொடர்பான அறிவிப்பு வெளியானது!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு பாராளுமன்ற உறுப்பினரும், கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் ஸ்ரீதரன் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நேற்று முன்தினம், வீட்டில் இடம்பெற்ற அனர்த்தத்தை தொடர்ந்து யாழ்.போதனா வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்திருந்தார்.

இன்று அதிகாலை அவரது புகழுடலைப் பொறுப்பேற்ற ஸ்ரீதரன் எம்.பி, மாவிட்டபுரத்தில் உள்ள இல்லத்தில் வைத்து, புகழுடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

மறைந்த மாவை சேனாதிராஜாவின் புகழுடல், அரசடி வீதி, மாவிட்டபுரம், தெல்லிப்பழையிலுள்ள அவரது இல்லத்தில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, இறுதிக் கிரியைகள் எதிர்வரும் 2ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதேவேளை, மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கு எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ இரங்கல் தெரிவித்துள்ளார்.

தமிழ் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து முன்நின்று, தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் எழுப்பிய, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் சிரேஷ்ட தலைவருமான மாவை சேனாதிராஜா அவர்களின் திடீர் மறைவிற்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாக தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதேவேளை, மாவை சேனாதிராஜாவின் புகழுடலுக்கு கட்சியின் முக்கிய உறுப்பினர்களால் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கொடி போர்த்தப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles