NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலம் மாற மாற விளையாட்டிலும் கூட பல மாறுதல்கள் வர வேண்டும்.

ஐபிஎல் 2024 ஆம் ஆண்டு சீசனில் 260 ரன்கள் அடித்தால் கூட அதனை துரத்தியடிக்கும் அணி எளிதாக எட்டி வெற்றி பெறும் சம்பவங்களும் நடைபெற்றது. 240 ரன்கள் எடுத்தால் கூட அது பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது என்று சன்ரைசர்ஸ் அணி கேப்டன் கம்மின்ஸ் கூறி இருக்கிறார். ஐபிஎல் தொடர் இப்படி மாறியதற்கு முக்கிய காரணம் இம்பேக்ட் விதி தான் என்று பல்வேறு அணிகளும் குற்றம் சாட்டு இருக்கிறார்கள். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள கேகேஆர் அணி நிர்வாகம் இம்பேக்ட் விதி பந்துவீச்சாளர்களுக்கு கெட்ட கனவாக அமைந்திருக்கிறது என்றும் கூறியிருக்கிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இம்பேக்ட் விதி தற்காலிகமாக தான் கொண்டுவரப்பட்டது என்றார்.இதில் இருக்கும் சாதகம் என்ன பாதகம் என்ன என்பதை ஆராய்ந்து அந்த விதியை மாற்ற வாய்ப்பு பிற்காலத்தில் ஏற்படும் என்றும் கூறியிருந்தார். கேப்டன் ரோகித் சர்மா உள்ளிட்ட வீரர்கள் கூட இம்பேக்ட் விதிக்கு எதிராக தான் கருத்து தெரிவித்துள்ளார்கள். ஆனால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி இம்பேக்ட் விதி காலத்திற்கு ஏற்ப ஒன்று என்றும் அதனை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார். காலம் மாற மாற நீங்களும் உங்களுடைய ரூல்ஸ்களை மாற்றிக் கொண்டு இருக்க வேண்டும்.மற்ற விளையாட்டிலும் கூட பல மாறுதல்கள் வந்து கொண்டே இருக்கிறது. இந்த புதிய விதியின் மூலம் பல போட்டிகள் விறுவிறுப்பாக மாறி இருக்கிறது. இது நிச்சயம் நல்ல ரூல்ஸ். கடந்த ஐபிஎல் தொடருக்கும் தற்போது இருக்கும் ஐபிஎல் சீசன்களுக்கும் நிறைய வித்தியாசத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டுமல்லாமல் புதிய விதியின் மூலம் இந்திய வீரர்கள் பலருக்கும் வாய்ப்பு கிடைக்கின்றது. எப்போதுமே புதிதாக ஒன்று கொண்டு வந்தால் அது சரிப்பட்டு வராது என்று எதிர்க்க சிலர் இருப்பார்கள். போட்டி விறுவிறுப்பாக இருக்க வேண்டுமென்றால் இம்பாக்ட் விதி தான் தேவை என்று ரவி சாஸ்திரி கூறியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles