NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காலி அணிக்கு 158 ஓட்டங்கள் வெற்றி இலக்கு!




லங்கா பிரீமியர் லீக் T20 தொடரின் இரண்டாவது இறுதிப் போட்டிக்கான தகுதிப் போட்டியில், பி-லவ் கண்டி அணி, காலி டைடன்ஸ் அணிக்கு 158 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

கொழும்பு- ஆர்.பிரேமதாஸ மைதானத்தில தற்போது நடைபெற்றுவரும் இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பி-லவ் கண்டி அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பி-லவ் கண்டி அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 48 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 38 ஓட்டங்களையும் பெற்றுகு;கொண்டனர்.

காலி டைடன்ஸ் அணியின் பந்துவீச்சில், சொனால் தினுஷ மற்றும் லஹிர குமார ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கசுன் ராஜித மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 158 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி, இன்னமும் சற்று நேரத்தில் காலி டைடன்ஸ் அணி, துடுப்பெடுத்தாட களமிறங்கவுள்ளது.

Share:

Related Articles