காலி துறைமுகத்தை சுற்றுலா துறைமுகமாக அபிவிருத்தி செய்வதற்கான அனைத்து திட்டங்களையும் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சு தயாரித்துள்ளது.
இத்திட்டத்தில் 850 மீட்டர் மற்றும் 150 மீட்டர் நீளம் கொண்ட இரண்டு பிரேக்வாட்டர்கள், துறைமுக தளத்தை 12.05 மீட்டர் ஆழப்படுத்துதல், பயணிகள் முனையம் அமைத்தல் போன்றவை அடங்கும்.
இந்த அபிவிருத்தி நடவடிக்கைகளின் போது ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் வனவிலங்கு பிரச்சினைகளை தீர்ப்பதற்கான விசேட கலந்துரையாடல் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமான போக்குவரத்து அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
அமைச்சர்களான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் பவித்ரா வன்னியாராச்சி ஆகியோர் இதில் இணைந்து கொண்டதுடன், சுற்றாடல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை ஒரு வாரத்திற்குள் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
இந்த அபிவிருத்தி திட்டத்திற்காக 200 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.