(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி உடல்நலக் குறைவால் தனது 86ஆவது வயதில் நேற்று (12) காலமானார்.
கடந்த ஏப்ரல் மாதம் நுரையீரல் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு மிலனில் உள்ள சான் ரஃபேல் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
1994ஆம் ஆண்டு முதல் 2011ஆம் ஆண்டு வரை 4 முறை அவரது தலைமையில் ஆட்சி நடந்தது.
பெர்லுஸ்கோனியின் மரணம் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், ஒரு சகாப்தம் முடிந்துவிட்டது என்றும் இத்தாலியின் பாதுகாப்பு அமைச்சர் கைடோ க்ரோசெட்டோ தனது ட்விட்டர் பதிவின் மூலம் தெரிவித்துள்ளார்.