NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கால்நடைகளைப் பதிவு செய்வதைக் கட்டாயமாக்க வடக்கு மாகாண ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு

வடக்கு மாகாணத்தில் கால்நடைகள் திருடப்படுவதைத் தடுக்கும் வகையில் அனைத்து கால்நடைகளையும் பதிவு செய்யும் நடவடிக்கையைக் கட்டாயமாக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்கள் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்துள்ளார்.

கால்நடைகள் களவாடப்பட்டு இறைச்சிக்காக விற்பனை செய்யப்படுகின்றமை தொடர்பில் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் பதிவாகின்றமையை கருத்திற்கொண்டு ஆளுநர் இந்த பணிப்புரையை விடுத்துள்ளார்.

கால்நடைகளை வளர்ப்போர் கட்டாயமாகப் பதிவு செய்ய வேண்டும் எனவும், வெளிவட்டங்களுக்குக் கால் நடைகளைக் கொண்டு செல்வதற்கான அனுமதியை வழங்கும் போது உரியச் சட்ட விதிகளை அதிகாரிகள் பின்பற்ற வேண்டும் எனவும் ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கன்று பிறந்து 18 மாதங்களுக்குள் காது அடையாள வில்லைகளை (Ear Tag) பொருத்திக் கொள்வதைக் கட்டாயமாக்க வேண்டும் எனவும், அவ்வாறு செய்யாத கால்நடை வளர்ப்பார்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கௌரவ ஆளுநர் பணிப்புரை விடுத்துள்ளார்.

அத்துடன் இறைச்சிக்காக வெட்டப்படும் மாடுகளின் காது அடையாள வில்லைகள் (Ear Tag) பரிசோதிக்கப்பட வேண்டும் எனவும், உரிய நடைமுறைகளைப் பின்பற்றாத இறைச்சி வெட்டும் இடங்கள் மற்றும் விற்பனை செய்யும் இடங்களுக்குச் சீல் வைக்க நடவடிக்கை எடுக்குமாறும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles