காஸாவின் சைடவுன் பகுதியில் உள்ள வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்தனர்.
மேலும் 20 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸாவிலுள்ள அல் அவ்தா வைத்தியசாலைக்கு அருகே இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வைத்தியசாலை அருகில், நுசிராத் அகதிகள் முகாமில் ஊடகவியலாளர்கள் புகைப்படங்கள் எடுக்கும் போது, அவர்களின் வாகனம் மீது இஸ்ரேல் இராணுவம் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது..