அநுராதபுரம் – கொக்கவௌ, தூதுவௌ பிரதேசத்தில் விவசாய கிணற்றில் விழுந்து 02 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (17) பிற்பகல், தாயும் அவரது மகளும் நீரில் மூழ்கிய நிலையில், மீட்கப்பட்டு, கலென்பிந்துனுவேவ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியின் தாய் மேலதிக சிகிச்சைக்காக அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் துடுவௌ பிரதேசத்தைச் சேர்ந்த 02 வயது 05 மாத வயதுடைய சிறுமியே உயிரிழந்துள்ளார்.
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, துடுவௌ பிரதேசத்தில் உள்ள விவசாய கிணற்றில் உயிரிழந்த சிறுமியின் சடலம் மிதந்ததாகவும், 31 வயதான அவரது தாயார் கிணற்றில் கயிற்றில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாகவும், இருவரையும் மீட்டு வைத்தியசாலையில், அனுமதித்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமி உயிரிழந்த விதம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கவௌ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.