NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கியூபாவில் தண்ணீருக்கு பாரியளவிலான தட்டுப்பாடு..!

கியூபாவின் தலைநகர் உள்ளிட்ட பல பகுதிகளில் உணவு மற்றும் எரிபொருள் என்பவற்றுக்குத் தட்டுப்பாடு நிலவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், குறித்த பகுதிகளில் 30ஆயிரத்துக்கும் அதிகமானோர் தினமும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கியுள்ள கியூபா, தற்போது நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பாரிய சவாலாக மாறியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், அங்கு எரிபொருளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதனால் நகரங்களுக்கிடையே நீரைக் கொண்டு செல்வது பாரிய பிரச்சினையாக மாறியுள்ளதாகக் கியூபா அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

Share:

Related Articles