NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் ஜாம்பவான் லசித் மலிங்கவின் பிறந்த தினம் இன்று!

இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவானாக விளங்கும் லசித் மலிங்கவின் பிறந்த தினம் இன்றாகும்.

இலங்கை அணிக்காக 2004 முதல் 2020 வரை டெஸ்ட், ஒரு நாள், டி20 என மூன்று வகை போட்டிகளில் விளையாடி அணியின் அடையாளமாக இருப்பவர்.

தொடக்கத்தில் இவரின் பந்துவீசும் பாணி விநோதமாக பார்க்கப்பட்டது. இது பற்றி சில துடுப்பாட்ட வீரர்கள் ஆட்சோபனையும் தெரிவித்தனர். ஆனால் ICC விதிமுறைக்கு உட்பட்டு இவரது பந்துவீச்சு பாணி உள்ளது என உறுதி செய்யப்பட்டது.

உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இரண்டு முறை ஹாட்ரிக் எடுத்த வீரர், 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை இரண்டு முறை எடுத்த வீரர், ஒரு நாள் போட்டிகளில் மூன்று ஹாட்ரிக் எடுத்த ஒரே வீரர் மலிங்க.

அனைத்து வகை கிரிக்கெட்டிலும் 100 விக்கெட்களை எடுத்த முதல் வீரர் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரான மலிங்க IPL தொடரில் 170 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.

அதேபோல் இலங்கை அணி 2014ஆம் ஆண்டில் முதல் டி20 உலகக் கோப்பையை வென்றது. அந்த அணி 2002 சம்பியன்ஸ் கோப்பைக்கு பின்னர் வென்ற ICC தொடராக அமைந்த டி20 உலகக் கோப்பை அணிக்கு தலைவராக பொறுப்பு வகித்தவர் மலிங்க தான்.

இப்படியான பல்வேறு சாதனைகளை கிரிக்கெட்டில் படைத்துள்ள லசித் மலிங்க இன்று தனது 40ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையடுத்து சமூகவலைதளங்களில் அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles