NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் மனோஜ் திவாரி !

அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளிலும் இருந்து இந்திய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்டவீரரான மனோஜ் திவாரி ஓய்வு பெறுவதாக குறிப்பிட்டிருக்கின்றார்.

37 வயது நிரம்பிய மனோஜ் திவாரி இந்திய அணிக்காக 12 ஒருநாள் மற்றும் 3 T20I போட்டிகளில் மாத்திரமே ஆடியிருக்கின்ற போதும் IPL தொடர் மற்றும் இந்தியாவின் உள்ளூர் கிரிக்கெட் தொடரான ரஞ்சி கிண்ண முதல்தர கிரிக்கெட் தொடர் என்பவற்றில் விளையாடி அதிக அனுபவம் கொண்டவீரராக காணப்படுகின்றார்.

மனோஜ் திவாரி தான் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் விடயத்தினை தனது உத்தியோகபூர்வ இன்ஸ்டாக்கிரம் கணக்கு வாயிலாக உறுதிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles