கிரீஸ் நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள ரோட்ஸ் தீவு அருகே கடற்பகுதியில், அகதிகள் பயணம் செய்த படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ரோந்து படகு நெருங்கி வருவதை அறிந்து தப்பிக்க முயற்சிக்கும் போது இந்த விபத்து இடம்பெற்றதாக கடலோர காவல்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், விபத்து நடந்த இடத்திற்கு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்பு படையினர் வருகை தந்து மீட்பு பணியில் ஈடுபட்ட நிலையில், 18 பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் 8 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதோடு, மேலும் சிலர் காணாமல் போயுள்ளதாகவும், அவர்களை தேடும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.