NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிருலப்பனையில் துப்பாக்கிச் சூடு!

தனியாருக்கு சொந்தமான இறப்பர் தொழிற்சாலையின் பிரதான அலுவலகத்தின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நேற்று (17) மாலை துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக கிருலப்பனை பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிற்சாலையின் பிரதான வாயிலுக்கு அருகில் மூன்று வெற்று தோட்டாக்களை பொலிஸார் கண்டுபிடித்துள்ள நிலையில், குறித்த துப்பாக்கிச் சூட்டின் போது இறப்பர் தொழிற்சாலையில் பாதுகாப்பு உத்தியோகத்தர் பணியில் இருந்துள்ளதோடு, அவருக்கு எவ்வித உயிர் சேதமும் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லையென தெரிவித்த கிருலப்பனை பொலிஸார் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Share:

Related Articles