NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளாலி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14 டிப்பர் மணல் பொலிசாரால் மீட்பு..!

கிளாலி பகுதியில் சட்டவிரோதமாக மணல் அகழ்ந்து கொண்டு செல்வதற்கு தயாராக வைக்கப்பட்டிருந்த 14டிப்பர் மணல் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் உபுல் செனவிரட்ண அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஜீ.குலரட்ண தலைமையில் சுற்றிவளைக்கப்பட்டது.

இதன்போது அப்பகுதியில் 14டிப்பர் மணலையும் பொலிசார் மீட்கப்பட்டது. சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படாத நிலையில் சம்பவம் தொடர்பாக பளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் தொடர்பில் நாளைய தினம் நீதி மன்றுக்கு அறிக்கையிடவுள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles