NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சியில் காட்டு யானைகளால் நெல் வயல்கள் சேதம்..!

கிளிநொச்சி மகிழங்காடு கமக்காரர் அமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் நேற்றைய தினம் இரவு(18) காட்டு யானைகள் புகுந்து விவசாயிகளின் பல ஏக்கர் வயல் நிலங்களை நாசம் செய்துள்ளது.

விதைத்து ஒன்றரை மாதங்களே ஆன பயிர்களையே யானைகள் அழித்துள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

மேலும்,தொடர்ச்சியாக காட்டு யானைகளால் தமது நெல் வயல்கள் அழிவடைவதாகவும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தமக்கு யானை வேலிகளை அமைத்து தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

Related Articles