கிளிநொச்சி முகமாலை பகுதியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கிளிநொச்சி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி இன்று காலை மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிரே வந்த இலங்கைப் போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மோதியதில் குறித்த இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் 32 வயதுடைய யாழ்ப்பாணம் துன்னாலை பகுதியை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் பளைப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.