NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இருவர் கைது

கிளிநொச்சியில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரந்தன் நகரப் பகுதியில், யாழ் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக இன்றையதினம் காலை 5.30 மணியளவில் ஐஸ் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து 11 கிராம் நிறையுடைய ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், இரண்டு சந்தேக நபர்களும் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் தடையப் பொருட்களுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை இரண்டு சந்தேக நபர்களையும் கிளிநொச்சி நீதிமன்றல் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Share:

Related Articles