நத்தார் பண்டிகையின் போது எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறக்கூடாது என்ற நோக்கில் கிளிநொச்சி பொலீஸார் வீதி சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் வீதி ஒழுங்குகளை மீறுபவர்கள் சட்ட விரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பாகவும் பொலிசாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து வாகனங்களை மோப்ப நாய்களை வைத்து ஏ9 வீதியில் பொலீஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.