அரச கொள்கைகளுக்கமைவாக கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென 454.49 மில்லியன் ரூபாய் நிதி.
அந்தவகையில் கிளிநொச்சி,உருத்திரபுரம்,இராமநாதபுரம்,அக்கராயன் குளம்,புளியம்பொக்கனை,முழங்காவில்,பூநகரி,பரந்தன்,கண்டாவளை,பளை
ஆகிய கமநல சேவை பிரிவுகளுக்கென 454.49 மில்லியன் ரூபாய் ஓதுக்கீடு கிடைக்கப்பெற்று வைப்பிலிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக ஏக்கர் ஒன்றுக்கு 15000 ரூபா வீதமும் இரண்டாம் கட்டமாக ரூபா 10000 வீதமும் விவசாயிகளின் கணக்கிலக்கங்களுக்கு வைப்பிலிடப்பட்டுள்ளன.
முதற்கட்டமாக
கிளிநொச்சி கமநல சேவை பிரிவிற்கு 3166.88 ஏக்கருக்காக 47,504,773.50 ரூபாவும்,
உருத்திரபுரம் கமநல சேவை பிரிவிற்கு 1761.94 ஏக்கருக்கு 26,429,094.00 ரூபாவும்,
இராமநாதபுரம் கமநல சேவை பிரிவிற்கு 1632.77 ஏக்கருக்காக 24,491,619.00 ரூபாவும் ,
அக்கராயன் குளம் கமநல சேவை பிரிவிற்கு 2080.28 ஏக்கருக்கு
31,204,204.50 ரூபாவும்
புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவிற்கு 1837.75 ஏக்கருக்கு 27,566.320.50 ரூபாவும்
முழங்காவில் கமநல சேவை பிரிவிற்கு 1022.61 ஏக்கருக்கு 15.339,091.50 ரூபாவும்
பூநகரி கமநல சேவை பிரிவிற்கு 2306.53 ஏக்கருக்கு 34,598,010,00 ரூபாவும்
பளை கமநல சேவை பிரிவிற்கு 814.68 ஏக்கருக்கு 12,220,191.00 ரூபாவும்
பரந்தன் கமநல சேவை பிரிவிற்கு 2311.65 ஏக்கருக்கு 34,674,796.00 ரூபாவும்
கண்டாவளை கமநல சேவை பிரிவிற்கு 1252.66 ஏக்கருக்கு 18,789,946.50 ரூபாவுமாக முதற் கட்டத்தில் 15000 ரூபா வீதம் 18187.87 ஏக்கருக்குமாக 272,818,048.50 ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் கட்டமாக
கிளிநொச்சி கமநல சேவை பிரிவிற்கு 3165.0465 ஏக்கருக்காக 3165.0465 ரூபாவும்,
உருத்திரபுரம் கமநல சேவை பிரிவிற்கு 1760.5414 ஏக்கருக்கு 17605414 ரூபாவும்,
இராமநாதபுரம் கமநல சேவை பிரிவிற்கு 1632.7746 ஏக்கருக்காக16327746 ரூபாவும்
அக்கராயன் குளம் கமநல சேவை பிரிவிற்கு 2077.0525 ஏக்கருக்கு 20770525 ரூபாவும்
புளியம்பொக்கனை கமநல சேவை பிரிவிற்கு 1836.0274 ஏக்கருக்கு 18360274 ரூபாவும்
முழங்காவில் கமநல சேவை பிரிவிற்கு 1021.5649 ஏக்கருக்கு 10215649 ரூபாவும்
பூநகரி கமநல சேவை பிரிவிற்கு 2298.3991 ஏக்கருக்கு 22983991ரூபாவும்
பளை கமநல சேவை பிரிவிற்கு 814.6794 ஏக்கருக்கு 8146794 ரூபாவும்
பரந்தன் கமநல சேவை பிரிவிற்கு 2311.6532 ஏக்கருக்கு 23116532 ரூபாவும்
கண்டாவளை கமநல சேவை பிரிவிற்கு 1249.2467 ஏக்கருக்கு 12492467
ரூபாவுமாக இரண்டாம் கட்டத்தில் 10000 ரூபா வீதம் 18166.986 ஏக்கருக்குமாக 181,669,857.00 ரூபாய் வைப்பிலிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் கிளிநொச்சி மாவட்டத்திற்கு 2024/2025 ஆண்டு காலபோக பயிர்ச்செய்கைக்கான இலவச மானிய உரத்திற்கென முதற்கட்டத்தில் மொத்தமாக 272,818,048.50 ரூபாவும் இரண்டாம் கட்டத்தில் 181,669,857.00 ரூபாவுமாக மொத்தமாக 454,487,905.50 ரூபாய் நிதியானது அரசாங்கத்தால் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
எனவே விவசாயிகள் தங்களது கணக்கிலக்கங்களில் மேற்குறிப்பிடப்பட்டுள்ள தொகையானது வைப்பிலிடப்பட்டுள்ளதா என்பதனை உறுதிபடுத்திக்கொள்வதோடு பெற்றுக்கொள்ளாத விவசாயிகள் தங்களது கமநல சேவைநிலையங்களை தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.