கிளிநொச்சி – பரந்தன் கமநல சேவை நிலையத்தினால் கிளிநொச்சி – விழாவோடை பகுதியில் விவசாய வீதி அமைப்பு என்ற பெயரில் அபிவிருத்தி எதுவும் முன்னெடுக்கப்படாமல் பல இலட்சம் ரூபா அரச நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அதற்கு மேலதிகமாக விவசாயிகள் பலரிடமிருந்தும் பெருந்தொகை நிதி அறவிடப்பட்டதாகவும், அனுமதிகள் எதுவுமின்றி பெருந்தொகையான மரங்களும் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கிளிநொச்சி – பரந்தன் கமநல சேவை நிலையத்துக்கு உட்பட்ட விழாவோடை குளத்தின் நீரேந்து பகுதிக்குரிய எல்லைக் கற்கள் அகற்றப்பட்டு குறித்த நிலப்பகுதி அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்ட்டுள்ளததாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பாக பரந்தன் கமநல சேவை நிலையத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் கருத்து தெரிவிக்கையில், குறித்த வீதி அமைப்பதற்கான வேலைகள் தமது திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டிருந்ததுடன், அதற்கான அரச நிதி விடுவிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்த அவர், எனினும், தான் நேரில் சென்று எதனையும் பார்வையிடவில்லை எனவும், குறிப்பிட்டுள்ளார்.