இந்தியா – தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு பணிகளில் கண்டெடுக்கப்பட்ட அரிய பொருட்கள் அருங்காட்சியம் அமைக்கப்பட்டு பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 9ஆம் கட்ட அகழ்வு பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் நேரில் வந்து திறந்து வைத்தார்.
கீழடி மற்றும் ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட இடங்களில் அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில் தமிழர் பண்பாட்டை வெளிக்கொணரும் வகையில் பல்வேறு பண்டைய கால பொருட்கள் கிடைத்து வருகின்றன.
வைகை ஆற்றங்கரையில் உருவான தமிழர் பண்பாட்டை எடுத்துக்காட்டும் வகையில் சிவகங்கை மாவட்டம் கீழடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வு உள்ளது. கீழடியில் இதுவரை 8 கட்ட அகழாய்வு பணிகள் நிறைவடைந்துள்ளன.
இந்திய தொல்லியல் துறை சார்பில் 3 கட்டமாக அகழாய்வு பணிகளும், தமிழ்நாடு தொல்லியல் துறை மூலம் 5 கட்டமாக அகழாய்வு பணிகளும் நடந்துள்ளது. இந்த அகழாய்வுகளின்போது சூது பவளம், உறை கிணறுகள், தமிழ் பிராமி எழுத்துக்கள் கொண்ட பானை ஓடு உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இதனை தொடர்ந்து கீழடி அருங்காட்சியத்தை தினமும் ஏராளமான வரலாற்று ஆய்வாளர்கள், மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர்.
அருங்காட்சியகம் திறக்கப்பட்டு விட்டதால் 9ஆம் கட்ட அகழாய்வு பணிகளை தொடங்க முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கீழடியில் 9ஆம் கட்டமாக அகழாய்வு பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணெளி காட்சி மூலம் இன்று தொடங்கி வைத்தார்.