NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குடிநீர் சிக்கல் தொடர்பில் தேசிய நீர் வழங்கல் சபையின் அறிவித்தல்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய முடியும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

களனி ஆற்றின் நீர் மட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் அம்பத்தளை பிரதேசத்தில் மணல் மேடு அமைக்கப்பட்டுள்ளதாக பிரதி பொது முகாமையாளர் அஜித் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்த நாட்களில், நாட்டின்; பல பகுதிகளில் இருந்து குடிநீர் தொடர்பான சிக்கலான சூழ்நிலை பதிவாகி வருகிறது. எவ்வாறாயினும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போதுமான தண்ணீரைப் பெறுவதில் சிக்கல்கள் உள்ளன. ஆனால் அவற்றைத் தீர்ப்பதற்காக களனி ஆற்றின் குறுக்கே மணல் மேட்டை அமைத்துள்ளோம்.

அந்த அணையால் நமக்கு வரும் இரண்டு முக்கிய பிரச்சினைகளான ஆற்றில் நீர்மட்டம் குறைவது, குடிநீரில் உப்பு கலந்த கடல் நீர் சேர்வது போன்றவற்றையும் கட்டுப்படுத்தியுள்ளோம். அந்த நிபந்தனையின் கீழ் கொழும்பு மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளுக்கு தொடர்ச்சியாக நீரை விநியோகிப்பதில் எமக்கு பிரச்சினை இல்லை.

இருப்பினும், தற்போதைய வெப்பமான காலநிலையின் கீழ் நுகர்வோர் அதிக அளவு தண்ணீரை உட்கொள்வதால், எதிர்காலத்தில் சில சிக்கல் நிலைமைகள் இருக்கலாம். எனவே, எங்களால் வழங்கப்படும் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறு வாடிக்கையாளர்கள் கேட்டுக்கொள்கிறோம். முடிந்தவரை நதி மாசுபாட்டைக் குறைப்பதன் மூலம் நீர் ஆதாரங்களைப் பாதுகாக்க எங்களுக்கு உதவுங்கள் என அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles